சனி, 21 ஜனவரி, 2012

பொம்மை உடைக்கும் குழந்தைகள்


சில காகிதங்களோ
கொஞ்சம் களிமண்ணோ போதும்
நீங்கள் ஒரு பொம்மை செய்ய..

உங்கள் கற்பனைக்கேற்றவாறு
பொம்மை செய்து முடித்தபின்
பெருமகிழ்ச்சி கொள்கிறீர்கள்
முதல் குழந்தைக்கு தகப்பனானதைப் போல..

இப்போது பொம்மையை
உங்கள் குழந்தைக்கு
விளையாடத் தருகிறீர்கள் அதே மகிழ்ச்சியுடன்..
குழந்தையும் பெருமகிழ்ச்சி கொள்கிறது
பொம்மையோடு விளையாடி
அதை உடைத்தபின்..

ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி
ஒவ்வொன்றில் இருக்கக்கூடும்;
உங்களுக்கு பொம்மை செய்வதிலும்
உங்கள் குழந்தைக்கு பொம்மையை உடைப்பதிலும்
இருப்பதைப் போல..
.
.

5 கருத்துரைகள்:

சசிகலா சொன்னது…

மகிழ்ச்சி எந்த விதத்திலும் வரட்டும் அருமை

அப்துல் காதர் சொன்னது…

நன்றி சகோதரி!

பெயரில்லா சொன்னது…

Kavidhai arumai Nanbare ippadikku A.Abdoulkder ungaladhu peyare enakkum vaazhthukkal.

அப்துல் காதர் சொன்னது…

மிக்க மகிழ்ச்சி காதர் அவர்களே!

dafodil's valley சொன்னது…

ஆமாம் குழந்தைகளுக்கு உடைப்பதில் அப்படி உடைத்ததை ஆராய்ச்சி செய்து திரும்ப அதையே உருவாக்குவதில் எல்லையில்லா மகிழ்ச்சிதான். கவிதையாக ஒர் நடைமுறை உண்மையை கொடுத்ததற்கு நன்றி சகோ!

Twitter Bird Gadget