அறிமுகம்


கவிதை எழுதுவதற்கென்றே இந்த வலைப்பூவைத் தொடங்கியிருக்கிறேன். கவிதைகளை மட்டுமே எழுதியும் வருகிறேன். நான் ஏன் கவிதை எழுதுகிறேன் என யாரேனும் கேட்டால் சற்று யோசித்துதான் பதில் சொல்ல வேண்டியிருக்கும். அவ்வாறே, நான் எழுதுவதெல்லாம் கவிதையா எனக் கேட்டாலும் அதற்கு என்னிடத்தில் பதில் இல்லை. எனினும், கவிதை எழுதுவதற்கென்று காரணம் எதுவும் தேவையில்லை என்றே கருதுகிறேன். என்னுடைய கவிதைகள் பல்வேறு தளங்களில் இயங்குவதாகத் தோற்றமளித்தாலும், பெரும்பாலானவை ‘நான்’ மையக் கவிதைகளாகவே இருக்கும். என்னை முழுவதுமாய் கவிதைகளின் வழியே நான் வெளிப்படுத்திவிட்டதாய் நினைக்கவில்லை. கொஞ்சம் மறைத்தும் கொஞ்சம் வெளிப்படுத்தியும் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு போலவே இக்கவிதைகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்..

0 கருத்துரைகள்:

Twitter Bird Gadget