சனி, 16 ஜூலை, 2011

கவிதை, கவிதையைத் தவிர வேறில்லை..4

.
கவிதை செய்வதென தீர்மானித்தபின்
கை நழுவும் சொற்கள்
வந்து வந்து
கண் சிமிட்டிப் போகின்றன‌
கவிதையைக் கைவிடுவதென தீர்மானித்தபின்..

எனக்கும்
சொற்களுக்குமான‌
இவ்விளையாட்டில்
ஒப்புக்குச் சப்பாணியாய்
விழி பிதுங்கி நிற்கிறது
கவிதை..!
.
.

4 கருத்துரைகள்:

Admin சொன்னது…

அருமை.. மிக அருமை சகா!!

// ஒப்புக்குச் சப்பாணியாய்
விழி பிதுங்கி நிற்கிறது
கவிதை..! //

எப்போதும் ஏற்படுகின்ற ஒன்றுதான்

இன்னும் தாருங்கள்

அப்துல் காதர் சொன்னது…

நன்றி.. திரு.கறுவல் அவர்களே..!

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

சூப்பர்...

அப்துல் காதர் சொன்னது…

நன்றி.. திரு.'கவிதை வீதி' சௌந்தர் அவர்களே..!

Twitter Bird Gadget