நானொன்று நினைக்க
என் கவிதைகள்
வேறொன்றை எழுதிச் செல்கின்றன
என் சொற்படி கேளாத
இக்கவிதைகளின் மீது
பெரும் வன்மம் கொண்டிருக்கிறேன்
இந்த இரவின் முடிவில்
நாளை அதிகாலையில்
என் கவிதைகளைக் கொன்று விடுவதெனத் தீர்மானித்து
திட்டங்களைத் தீட்டியபடி
உறங்கிப் போகிறேன்
அதிகாலையில்
என் பிணத்தின் மீது குதித்தபடி
என் கவிதைகள் அறிவிக்கின்றன
கவிஞன் இறந்து விட்டானென..
4 கருத்துரைகள்:
அருமை அருமை
மிகவும் ரசித்தேன்
தொடர வாழ்த்துக்கள்
நன்றி அய்யா!
வணக்கம்
அருமையான கவிவரிகள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றிங்க ரூபன்!
கருத்துரையிடுக