ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

இயற்கையின் பெருந்துளிகளும் சிறு துரும்பாகிய நானும்..3


9.
பெருமழைக்கெனத் தவமிருக்கிறது
ஓடையாய் சுருங்கிவிட்ட
நதிக்குழந்தை..
அப்பெருமழை நாளில்
அது
தன் தாய் வீடேகும்.

அதுவரை
தன் அலைகளைக்
கரைகளில் அறைந்து
அரற்றிக் கொண்டிருக்கும்
கடல்தாய்.

10.
களைத்துப்போன கோடை
வழித்தெறியும்
வியர்வைத் துளிகள்
வீழ்கின்றன
பருவமழையின் முதற்துளிகளாய்..

11.
பருவமழை பெய்யுமா
தெரியவில்லை;
உழவன் விதைத்துக் கொண்டிருக்கிறான்
நம்பிக்கையை.


7 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமையான வரிகள்...

முடிவில் (11) உள்ள வரிகள் மனதை வலிக்க செய்தது...

தொடர வாழ்த்துக்கள்... நன்றி... (TM 1)

அப்துல் காதர் சொன்னது…

வாருங்கள் தனபாலன்!

தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!

(TM 1) என்றால் என்ன?

சாய் ராம் சொன்னது…

களைத்துப் போன கோடை - :))

அப்துல் காதர் சொன்னது…

நன்றி சாய்ராம் அவர்களே!

Seeni சொன்னது…

kaather anne!

nalla kavithai!

அப்துல் காதர் சொன்னது…

நன்றி சீனி அவர்களே!

NITHYAVANI MANIKAM சொன்னது…

அருமை வாழ்த்துகள்

Twitter Bird Gadget