ஒவ்வொன்றாய்ச் சேகரிக்கிறேன்
என் மீது எறியப்பட்ட
உங்களின் கற்களை..
என் குருதி தோய்ந்திருக்கும்
அவற்றில் சில
சுமந்து வந்திருக்கலாம்
எறியப்பட்டதற்கான நியாயங்களை..
எஞ்சியவை எறியப்பட்டதற்கான
காரணங்களை நீங்களே அறிவீர்கள்..
சேகரிக்கப்படும் இக்கற்கள்
உங்கள் மீது
திருப்பி எறிவதற்கல்ல;
இன்னொரு முறை
எவர் மீதேனும்
உங்களால் எறியப்படாமலிருக்க..
மேலும்
என் மீது எறியப்படும்
ஒவ்வொரு கல்லுக்கெனவும்
பூக்களைத் திருப்பியளிக்கிறேன்
உங்களுக்கு..
இருந்தபோதிலும்
தொடர்ந்து நீங்கள்
எறிந்துகொண்டேயிருக்கிறீர்கள்
கற்களை..
கற்களை..
நானும்
வளர்த்துக் கொண்டேயிருக்கிறேன்
என் தோட்டம் நிறைய
பூக்களை..
.
.
7 கருத்துரைகள்:
அழகான வரிகள்..
ஆழமான வரிகள்..
அருமை!!!
உலகத்தை புரிந்துக் கொண்டுள்ளீர்...
முனைவர் இரா.குணசீலன் மற்றும் கவிதை வீதி சௌந்தர் ஆகியோருக்கு என் கனிவான நன்றிகள்..!
அழகான வரிகள்..
நன்றி நண்பரே!
உயர்ந்த மனிதாபிமானம் என்பது இவைகளே
தங்கள் எழுத்துக்கள் என்னை வியப்பில் இட்டுச்
செல்கின்றது .அருமையிலும் அருமையான
கவிதைகள் மேலும் வாசிக்கும் ஆவலைத் தூண்டும்
கவிதை வரிகள் !!!!!.............தொடர்ந்தும் வருகிறேன் தங்கள் கவிதைப் பூக்களின் சுகந்தத்தை முழுமையாக உணர .மிக்க நன்றி அறிமுகம் செய்துகொண்டமக்கு .
வணக்கம் அம்பாளடியாள்!
தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி!
கருத்துரையிடுக