.
மெதுவாய்க்
கழிக்கப்படுகின்றன
வாரத்தின் ஐந்து நாட்கள்
சென்னை மாநகரில்..
நெரிசலான போக்குவரத்து..
உயரமான கட்டிடங்கள்..
எந்திர மயமான மனிதர்கள்..
அண்ணாந்து பார்க்கிறேன்
வானம் குறுகலாய்த் தெரிகிறது..
விரைந்து கழிகின்றன
வார இறுதி நாட்கள்
சொந்த ஊரில்..
சின்னஞ்சிறு வீடுகள்..
அசலான மனிதர்கள்..
அண்ணாந்து பார்க்கிறேன்
வானம் இப்போது
விசாலமாய்த் தெரிகிறது..
.
.
.
2 கருத்துரைகள்:
hm nanum unarndhen andha 3 madhangalil..
உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே!
கருத்துரையிடுக