சனி, 3 செப்டம்பர், 2011

புத்தாயுதம் - வீழ்த்தப்பட்டவனின் அல்லது சரணடைந்தவனின் ஒப்புதல் வாக்குமுலம்




ஒன்று:
கொஞ்ச காலம்
உன்னைத் தொடர்ந்த போதுதான்
அறிந்து கொண்டேன்
உன்னைத் தொடரவேயில்லை என்பதை..  

இரண்டு:
நானெப்படி
உன்னைத் தொடர்வேன்
நீயே விரும்பாதபோது..

மூன்று:
நிறைய மாறிவிட்டேனென்று
எல்லோரும் சொல்லும்போது 
நினைத்துக் கொள்கிறேன் 
உன்னை..

நான்கு:
நீ நிரம்பிய பின்தான் 
காலியானது
என் குடுவை..

ஐந்து:
உன் பிடிக்குள்
சிக்கிய பின்தான் 
தளர்ந்தது என் பிடி..

ஆறு:
எல்லாவற்றையும் பற்றியிருந்தேன்
சுமையாய் இருந்தது;
உன்னைப் பற்றினேன் 
இலேசாயிருக்கிறது..

ஏழு:
எங்கேயோ சிக்கிவிட்டேன்
என்கிறார்கள்;
இப்போதுதான் சுதந்திரமாயிருப்பதை
எப்படிச் சொல்வது..?

எட்டு:
எதிலேயோ வீழ்ந்து விட்டேன் 
என்கிறார்கள்;
எனது எழுச்சியை
எப்படிப் பறைசாற்றுவது..? 

ஒன்பது: 
பத்தாது ஆயுதம் என்றார்கள்;
புத்தாயுதம் இருக்கிறது என்றேன்
புது ஆயுதமா என்றார்கள்;
புத்த ஆயுதம் என்றேன்..!
.
.

2 கருத்துரைகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

காதலின் நவரசங்களை படித்ததுபோல் இருக்கிறது..

காதலின் பரவசங்கள் கவிதையில்...

அழகு..

அப்துல் காதர் சொன்னது…

நன்றி திரு.கவிதை வீதி செளந்தர் அவர்களே..!

Twitter Bird Gadget